இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 1700ஆக உயர்வு
நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,700-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,700-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
ஒமைக்ரானில் பாதிக்கப்பட்டவர்களில் 639 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1,061 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் குறித்த தரவுகளின் பட்டியலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க |அதிகரிக்கும் கரோனா: இந்தியாவில் 33 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு
அதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 510 பேருக்கும், தில்லியில் 351 பேருக்கும், கேரளத்தில் 156 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்சமாக மணிப்பூர், லடாக், ஹிமாச்சல், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.