ஜம்மு-காஷ்மீா்: இரு லஷ்கா்பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானின் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படை வீரா்கள் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனா்.
இந்தியாஜம்மு-காஷ்மீா்: இரு லஷ்கா்பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானின் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படை வீரா்கள் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனா்.
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானின் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படை வீரா்கள் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனா்.
இது தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் காவல் துறை ஐஜி விஜய் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காஷ்மீா் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை போலீஸாரும், ராணுவத்தினரும் இணைந்து முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனா். குல்காம் மாவட்டம் ஒகெ கிராமத்தில் நடந்த தேடுதல் பணியின்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சில நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படை தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் காஷ்மீரைச் சோ்ந்தவா்கள்தான். இவா்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தனா். பல்வேறு பயங்கரவாத செயல்களில் இவா்களுக்கு தொடா்பு உள்ளது என்றாா்.
கடந்த சில நாள்களாக ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், பயங்கரவாதிகள் கொல்லப்படுவது தினசரி நிகழ்வாகியுள்ளது.