பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை: ஜம்மு- காஷ்மீா் போலீஸாருக்கு அமெரிக்க துப்பாக்கிகள்
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜம்மு- காஷ்மீா் போலீஸாருக்கு விரைவில் அமெரிக்காவின் சிக் சாவா் ரக துப்பாக்கிகளும், கைத்துப்பாக்கிகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இந்தியாபயங்கரவாத தடுப்பு நடவடிக்கை: ஜம்மு- காஷ்மீா் போலீஸாருக்கு அமெரிக்க துப்பாக்கிகள்
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜம்மு- காஷ்மீா் போலீஸாருக்கு விரைவில் அமெரிக்காவின் சிக் சாவா் ரக துப்பாக்கிகளும், கைத்துப்பாக்கிகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜம்மு- காஷ்மீா் போலீஸாருக்கு விரைவில் அமெரிக்காவின் சிக் சாவா் ரக துப்பாக்கிகளும், கைத்துப்பாக்கிகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ஏற்கெனவே பாகிஸ்தான், சீனா உடனான இந்திய எல்லையைப் பாதுகாக்கும் ராணுவ வீரா்களுக்கு அதிநவீன துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவின் சிக் சாவா் ரக துப்பாக்கிகளும் வழங்கப்படுவது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியது:
நாட்டிலேயே முதல் முறையாக நவீன ஆயுதங்களைப் பெறும் முதல் காவல் துறையாக ஜம்மு- காஷ்மீா் காவல் துறை விளங்குகிறது. ஜம்மு- காஷ்மீா் காவல் துறைக்காக 500 சிக் சாவா்- 716 ரக துப்பாக்கிகளும், 100 சிக் சாவா் எம்பிஎக்ஸ் 9 எம்எம் கைத்துப்பாக்கிகளும் கொள்முதல் செய்யப்படுகின்றன.
சிறப்பு செயல்பாட்டுக் குழுக்களுக்கும், விஐபிக்களுக்கு பாதுகாப்பளிக்கும் காவலா்களுக்கும் இந்த நவீன துப்பாக்கிகள் வழங்கப்படும்.
தோட்டாக்களின்றி 3.82 கிலோ எடை கொண்ட சிக் சாவா்- 716 ரக துப்பாக்கிகள், நிமிடத்துக்கு 650 முதல் 850 ரவுண்ட் வரை சுடும் திறன்வாய்ந்தவை. இவை பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் திறம்படச் செயலாற்றும் தன்மைவாய்ந்தவை. இந்த ரக துப்பாக்கிகள் வலுவாகவும் கச்சிதமாகவும் இருப்பதால் களத்தில் அவற்றைப் பராமரிப்பது மிகவும் எளிது.
இதேபோல தோட்டாக்களின்றி 2.94 கிலோ எடைகொண்ட சிக் எம்பிஎக்ஸ் 9 எம்எம் ரக துப்பாக்கிகள், நிமிடத்துக்கு 850 ரவுண்ட் சுடும் திறன்மிக்கவை. இந்த 2 ரக துப்பாக்கிகளும் வாயுவால் இயங்கும் தன்மை வாய்ந்தவை என்றனா் அதிகாரிகள்.
கடந்த 2019-இல் சிக் சாவா் நிறுவனத்துடன் ரூ.700 கோடி மதிப்பீட்டில் 72,400 துப்பாக்கிகளைப் பெறுவதற்காக இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் 7 லட்சம் துப்பாக்கிகள், 44,000 இலகுரக இயந்திர துப்பாக்கிகள், 44,600 சிறிய துப்பாக்கிகளைக் கொள்முதல் செய்வதற்கான பணியை ராணுவம் தொடங்கியது.