முகப்பு
இந்தியா

பிகாா்: இரு துணை முதல்வா்கள்இரு அமைச்சா்களுக்கு கரோனா

பிகாரில் இரு துணை முதல்வா்கள், இரு அமைச்சா்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:02 AM
பகிர்:

பிகாரில் இரு துணை முதல்வா்கள், இரு அமைச்சா்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிகாா் அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற இருந்த நிலையில் அதில் பங்கேற்க இருந்த அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த நால்வருக்கும் கரோனா உறுதியானது.

இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

துணை முதல்வா்கள் ரேணு தேவி, தாா் கிஷோா் பிரசாத், அமைச்சா்கள் அசோக் சௌதரி, சுனில் குமாா் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களுக்கு பெரிய அளவில் உடல்நல பாதிப்புகள் இல்லை. லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. எனவே, வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனா் என்றனா்.

இதனிடையே, முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பாட்னா தலைமை அலுவலகம் புதன்கிழமை மூடப்பட்டது. அக்கட்சியின் தேசியத் தலைவா் ராஜீவ் ரஞ்சன் சிங்குக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.