முகப்பு
இந்தியா

கரோனா எதிரொலி: உ.பி.யில் காங்கிரஸ் மாரத்தான்கள் ஒத்திவைப்பு

உத்தரப் பிரதேசத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், காங்கிரஸ் நடத்தும் மாரத்தான்களை ஒத்திவைப்பதாக அக்கட்சி புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:02 AM
பரேலியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கூட்டநெரிசலில் சிக்கிய மாணவிகள்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், காங்கிரஸ் நடத்தும் மாரத்தான்களை ஒத்திவைப்பதாக அக்கட்சி புதன்கிழமை தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மார்ச் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பிரசாரத்தை அனைத்து கட்சியினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் “நான் ஒரு பெண், என்னால் சண்டையிட முடியும்” என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் மாரத்தான் ஓட்டப்பந்தயங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று வேகமாக அதிகரித்து வரும் காரணத்தால் நொய்டா, வாராணசி உள்ளிட்ட பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த 8 மாரத்தான்களை ஒத்திவைப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று பரேலியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 3 மாணவிகள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →