முகப்பு
இந்தியா

நாட்டில் 58 ஆயிரத்தைத் தாண்டிய ஒருநாள் கரோனா பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 58,097 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
ஒருநாள் கரோனா பாதிப்பு 58 ஆயிரத்தைத் தாண்டியது
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 58,097 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

நாட்டில் நேற்று 37,379 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 58 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.49 லட்சத்திலிருந்து 3.50 லட்சமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 58,097 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 534 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,82,551-ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாளில் 15,389 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 2,14,004-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 147.72 கோடி கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
 

முழு கட்டுரையைப் படிக்க →