ஒடிசாவில் 5 மாதங்களில் இல்லாத வகையில் ஒருநாள் பாதிப்பு அதிகரிப்பு
ஒடிசாவில் கடந்த 5 மாதங்களில் இல்லாத வகையில் கரோனா பாதிப்பு இன்று 1,216 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் கடந்த 5 மாதங்களில் இல்லாத வகையில் கரோனா பாதிப்பு இன்று 1,216 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குர்தா மாவட்டத்தில் இரண்டு பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 8,466 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 187 குழந்தைகள் இருப்பதாக சுகாதாரத்துறை தரவுகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நோய்த்தொற்று எண்ணிக்கை 10.58 லட்சமாக உயர்ந்துள்ளது, இதில் 10.45 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
மாநிலத் தலைநகர் புவனேஸ்வர் ஒரு பகுதியாக இருக்கும் குர்தா மாவட்டத்தில் அதிகபட்சமாக 456 பேருக்கு கரோனா பாதித்துள்ளது. அதைத் தொடர்ந்து சுந்தர்கர் 166, சம்பல்பூர் 99 மற்றும் கட்டாக் ஆகிய மாவட்டத்தில் 80 ஆகவும் பதிவாகியுள்ளன.
ஒடிசாவில் தற்போது 3,981 பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளன. செவ்வாயன்று மொத்தம் 68,878 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.