சுக்தேவ் சிங் திண்ட்சா 
இந்தியா

சிரோமணி அகாலி தளம் (சன்யுக்தா) கட்சித் தலைவருக்கு கரோனா

சிரோமணி அகாலி தளம் (சன்யுக்தா) கட்சியின் தலைவர் சுக்தேவ் சிங் திண்ட்சாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

சிரோமணி அகாலி தளம் (சன்யுக்தா) கட்சியின் தலைவர் சுக்தேவ் சிங் திண்ட்சாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் கரோனா பரவல் (ஒமைக்ரான்) அதிகரித்து வரும் சூழ்நிலையில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில், சிரோமணி அகாலி தளம் (சன்யுக்தா) கட்சியின் தலைவர் சுக்தேவ் சிங் திண்ட்சாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாபின் பிரோஸ்பூரில் இன்று பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பிரசாரத்திற்கு சென்ற நிலையில் கரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானதை அடுத்து அவர் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் திரும்பினார். தற்போது சிகிச்சைக்காகதனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

சுக்பீர் சிங் பாதல் தலைவராக இருக்கும் சிரோமணி அகாலி தளம் கட்சியில் இருந்து விலகிய சுக்தேவ் சிங் திண்ட்சா, சிரோமணி அகாலி தளம் (சன்யுக்தா) என்ற கட்சியின் தலைவராக இருக்கிறார். 

பாஜகவில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகிய நிலையிலும் சிரோமணி அகாலி தளம் (சன்யுக்தா) இன்னும் பாஜக கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

600 கோல்களை நிறைவுசெய்த லூயிஸ் சௌரஸ்..! முதல் உருகுவே வீரராக சாதனை!

இருமல் மருந்து விவகாரம்: முதல்வருக்கு பொறுப்புள்ளது - அண்ணாமலை

சம்-சம் லட்கியே... நிகிதா சர்மா!

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: பல வணிக கட்டடங்கள் சேதம்

SCROLL FOR NEXT