இந்தியா

தில்லியில் தற்போது ஊரடங்கு தேவையில்லை: சுகாதாரத் துறை அமைச்சர்

DIN

தில்லியில் ஒமைக்ரான் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இருப்பதால் முழு ஊரடங்கு தற்போது தேவையில்லை என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். 

தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: 

தில்லியில் இன்று மட்டும் கரோனா பாதிப்பு 14,000-க்கும் மேல் இருக்க வாய்ப்புள்ளது. எனினும், ஒமைக்ரான் தொற்றால் உயிரிழப்பு ஏதுமில்லை. 

தில்லியில் ஒமைக்ரான் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இருப்பதால் முழு ஊரடங்கு தற்போது தேவையில்லை. மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார். 

ஒமைக்ரான் பரவல் காரணமாக தில்லியில் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

SCROLL FOR NEXT