தில்லி: யுபிஎஸ்சி முதன்மை தேர்வை ஒத்திவைக்கக்கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக யுபிஎஸ்சி முதன்மை தேர்வை ஒத்திவைக்கக்கோரி தொடர்ந்த வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக யுபிஎஸ்சி முதன்மை தேர்வை ஒத்திவைக்கக்கோரி தொடர்ந்த வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட முதன்மைத் தேர்வுகள் நாளை ஜன. 7, 8, 9, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நாடு முழுவதும் நடைபெறவுள்ளன. பல மாநிலங்களில் கரோனா சூழலை கருத்தில்கொண்டு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தேர்வர்கள் எந்தவித பிரச்னையும் இன்றி தேர்வு மையங்களுக்கு செல்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் யுபிஎஸ்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், கரோனா பரவலைக் காரணமாக வைத்து தேர்வை எழுதும் சிலர் தில்லி உயர்நீதிமன்றத்தில் தேர்வை ஒத்திவைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் டிஆர்டிஒ-வில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
தமிழகத்திலும் போட்டித் தேர்வுகள் நடைபெறும் இடங்களுக்குச் செல்லும் தேர்வர்கள், நேர்முகத் தேர்வுக்குச் செல்வோர் தங்களது தேர்வுகூட அனுமதி சீட்டு, அழைப்புக் கடிதம் ஆகியவற்றைக் காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.