இந்தியா

குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு: இன்றுமுதல் துவக்கம்

மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட முதன்மைத் தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

DIN


மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட முதன்மைத் தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

குடிமைப் பணிகள் தேர்வு(முதன்மை) இன்று, நாளை, 9, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நாடு முழுவதும் நடைபெறவுள்ளன. பல மாநிலங்களில் கரோனா சூழலை கருத்தில்கொண்டு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தேர்வர்கள் எந்தவித பிரச்னையும் இன்றி தேர்வு மையங்களுக்கு செல்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் யுபிஎஸ்சி கேட்டுக் கொண்டதை தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இந்த நிலையில் தமிழக அரசு கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளித்து, கட்டுப்பாடுகளையும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையும் அறிவித்தது. 

மேலும், போட்டித் தேர்வுகள் நடைபெறும் இடங்களுக்குச் செல்லும் தேர்வர்கள், நேர்முகத் தேர்வுக்குச் செல்வோர் தங்களது தேர்வுகூட அனுமதி சீட்டு, அழைப்புக் கடிதம் ஆகியவற்றைக் காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT