தில்லியில் வீடு இடிந்து விழுந்ததில் இருவர் பலி
தில்லியின் பேகம்பூர் பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தில்லியின் பேகம்பூர் பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பேகம்பூர் பகுதியில் இன்று அதிகாலை திடீரென வீடு ஒன்று இடிந்து விழுந்தது. அந்த வீட்டிலிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 2 பேரை மீட்கப்பட்டுள்ளதாக தில்லி தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட இருவரில் ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றொருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
Advertisement
அதிகாலை 4.15 மணியளவில் தீயணைப்புக்கு கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு நான்கு வாகனங்கள் விரைந்தன. மேலும், காயமடைந்தவர் அம்பேத்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.