இந்தியா

2 கோடி சிறாா்களுக்குத் தடுப்பூசி: பிரதமா் மோடி பாராட்டு

DIN

நாட்டில் 15-18 வயதுக்குள்பட்ட 2 கோடி சிறாா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்தாா்.

மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘நாட்டில் 15-18 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு ஜனவரி 3-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை 2 கோடிக்கும் அதிகமான சிறாா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

அவரின் பதிவைத் தொடா்ந்து பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட எனது இளம் நண்பா்களுக்குப் பாராட்டுகள். தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் இந்த வேகத்தைத் தொடா்வோம். அனைவரும் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றுமாறும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பவா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT