இந்தியா

மாநில முதல்வர்களுடன் விரைவில் ஆலோசனை: பிரதமர் மோடி 

DIN

கரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் விரைவில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுக்குப் பிறகு தினசரி பாதிப்புகள் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கின. கடந்த 24 மணி நேரத்தில் 1.59 லட்சம் பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 224 நாள்களில் இதுவே அதிகபட்ச பாதிப்பு. கடந்த 197 நாள்களில் இல்லாத அளவுக்கு 5,90,611 பேர் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், நாட்டில் நிலவும் கரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி இன்று மாலை அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். 
கூட்டத்தில் பேசிய பிரதமர், கரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் விரைவில் ஆலோசனை மேற்கொள்ளப்படும். மாவட்ட அளவில் சுகாதார உட்கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும். 
அவசரகால கரோனா நிதி உள்ளிட்ட உதவிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும். போர்க்கால அடிப்படையில் சிறார்களுக்கான தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT