இந்தியா

அதிகரிக்கும் கரோனா: பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை

DIN


நாட்டில் கரோனா நோய்த் தொற்று பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அவசர ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுக்குப் பிறகு தினசரி பாதிப்புகள் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கின. கடந்த 24 மணி நேரத்தில் 1.59 லட்சம் பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 224 நாள்களில் இதுவே அதிகபட்ச பாதிப்பு. கடந்த 197 நாள்களில் இல்லாத அளவுக்கு 5,90,611 பேர் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒமைக்ரான் தொற்றால் மட்டும் நாட்டில் இதுவரை மொத்தம் 3,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாட்டில் நிலவும் கரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி மாலை 4.30 மணியளவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT