இந்தியா

பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு கரோனா

DIN


பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டது.

தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிதீஷ் குமார், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் தற்போது வீட்டில் தனிமையில் இருப்பதாக பிகார் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிகாரில் ஏற்கெனவே ஜனவரி 6 முதல் 21 வரை இரவுநேர கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. 1 முதல் 8 வரை நேரடி வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இணைய வழி வகுப்புகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் 50 சதவிகித மாணவர்களைக் கொண்டு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், மைதானங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகளும் ஜனவரி 21 வரை அமலில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

SCROLL FOR NEXT