இந்தியா

தில்லியில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும் விகிதம் இன்று 25%

DIN


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 25 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 76,670 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 19,166 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 25 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 14,076 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் 25,030 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,75,22,072 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும், 15 முதல் 17 வயது வரையிலான சிறார்கள் 8,840 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதுவரை மொத்தம் 2,51,084 சிறார்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

கடையின் பூட்டை உடைத்து ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT