கோப்புப்படம் 
இந்தியா

கோவா அமைச்சர் மைக்கேல் லோபோ ராஜிநாமா

கோவா பாரதிய ஜனதா கட்சியில் மூத்த தலைவரும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான மைக்கேல் லோபோ தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.

DIN

கோவா பாரதிய ஜனதா கட்சியில் மூத்த தலைவரும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான மைக்கேல் லோபோ தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மைக்கேல் லோபோ பேசியதாவது,

நான் கோவா அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன். கலங்குட் தொகுதி மக்கள் எனது முடிவை மதிப்பார்கள் என்று நம்புகிறேன். எனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்கிறேன். பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். பாஜக தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதைக் கண்டு நான் வருத்தப்படுகிறேன் என்றார்.

இதற்கிடையே இன்று மாலை காங்கிரஸ் கட்சியில் லோபோ இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. இதில், கோவா தேர்தலின் வாக்குப்பதிவு பிப்ரவரி 14ஆம் தேதியும் வாக்கெண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT