முகப்பு
இந்தியா

பார்த்தாலே கண்களைக் குளிரச் செய்கிறது சிம்லா

இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில், 2022ஆம் ஆண்டின் முதல் பனிப்பொழிவு கடந்தவார இறுதியில் தொடங்கியது.

Updated On : 10 ஜனவரி, 2022 at 5:44 PM
சிம்லாவில் பனிப்பொழிவு
பகிர்:


சிம்லா: இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில், 2022ஆம் ஆண்டின் முதல் பனிப்பொழிவு கடந்தவார இறுதியில் தொடங்கியது.

சனிக்கிழமையன்று சிம்லாவில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. அன்றைய தினம் குளிர்நிலையானது மைனஸ் 5.1 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்தது.

சிம்லாவின் பெரும்பான்மையான பகுதிகள் அனைத்திலும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக குளிரில் நடுங்கின. மலை மற்றும் மலைப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் கடுங்குளிர் வாட்டியது.

Advertisement

மக்கள் பலரும் தங்கள் பகுதியில் ஏற்பட்ட பனிப்பொழிவு தொடர்பான விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

சுற்றுலாத் தலங்களான குஃப்ரி மற்றும் நர்கண்டா ஆகியவற்றிலும் பனிப்பொழிவு இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.