இந்தியா

தில்லியில் ஒரே நாளில் 21,259 பேருக்கு கரோனா; 23 பேர் பலி

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 21,259 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளில் மட்டும் 23 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். 

DIN

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 21,259 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளில் மட்டும் 23 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். 

தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் 25.65 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு மே 5-ஆம் தேதி பதிவானதை விட அதிகமாகும்.

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்களை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் 82 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், புதிதாக 21,259 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 23 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

தில்லியில் 12,161 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 2,161 பேர் மருத்துவமனைகளிலும், 50,796 பேர் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT