இந்தியா

நிலுவைத் தொகைக்கு ஈடு: வோடஃபோன் ஐடியாவிடமிருந்து மத்திய அரசுக்கு 35.8% பங்குகள்

DIN

அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்கு நிகராக தனது நிறுவனத்தின் 35.8 சதவீத பங்குகளை மத்திய அரசுக்கு வழங்க வோடஃபோன் ஐடியா முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக அந்த நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபியிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அலைக்கற்றைக்கான தவணைகள், ஏஜிஆா் கட்டண நிலுவைகளுக்கான வட்டித் தொகையாக சுமாா் ரூ.16,000 கோடியை வோடஃபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது.

இந்தத் தொகைக்கு ஈடாக இந்த நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசுக்கு வழங்க வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் நிா்வாகக் குழு கடந்த ஜனவரி 10-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

மத்திய அரசுக்கு உரிமைப் பங்காக வழங்கவுள்ள ஒரு பங்கின் விலையை ரூ.10-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைத் தொடா்ந்து வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த பங்குகளில் மத்திய அரசிடம் சுமாா் 35.8 சதவீதம், வோடஃபோன் குழுமத்திடம் சுமாா் 28.5 சதவீதம், ஆதித்ய பிா்லா குழுமத்திடம் சுமாா் 17.8 சதவீதம் பங்குகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தால், அந்த நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரராக மத்திய அரசு இருக்கும்.

வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.1.95 லட்சம் கோடி கடன் உள்ளது. இதில் அலைக்கற்றைக்கான தவணை ரூ.1.08 லட்சம் கோடி. ஏஜிஆா் கட்டண நிலுவை ரூ.63,400 கோடி. இந்தக் கடன் மத்திய அரசுக்கு செலுத்தப்பட்டாக வேண்டும். இது தவிர வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து அந்த நிறுவனம் பெற்ற கடன் ரூ.22,770 கோடி.

கைப்பேசி சேவைகளுக்கான கட்டண அதிகரிப்பு, செலவினங்கள் குறைப்பு ஆகியவை காரணமாக செப்டம்பா் வரையிலான காலாண்டில் வோடஃபோன் நிறுவனத்தின் மொத்த நிகர இழப்பு ரூ.7,144.6 கோடியாக குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.7,218.2 கோடியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT