அசாம்-நாகாலாந்து ஆளுநர் ஜெகதீஷ் முக்கிக்கு கரோனா
அசாம்-நாகாலாந்து ஆளுநர் ஜெகதீஷ் முக்கிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அசாம்-நாகாலாந்து ஆளுநர் ஜெகதீஷ் முக்கிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து குவாஹட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க- ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெற்ற இலங்கை வீரர்
ஆளுநரைத் தொடர்ந்து அவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ராஜபவனில் தன்னை தனிமைப்படுத்திகொண்டுள்ளார்.
இதனிடையே ஆளுநர் ஜெகதீஷ் முக்கி விரைவில் குணமடைய பிராத்திப்பதாக அசாம் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார்.