முகப்பு
இந்தியா

வார இறுதி ஊரடங்குக்கு சாட்சியாக மாறிய தில்லி

கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் தலைநகர் புது தில்லியில் வார இறுதிநாள் ஊரடங்கு வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு அமலுக்கு வந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
வார இறுதி ஊரடங்குக்கு சாட்சியாக மாறிய தில்லி
பகிர்:


புது தில்லி: கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் தலைநகர் புது தில்லியில் வார இறுதிநாள் ஊரடங்கு வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு அமலுக்கு வந்தது.

இதையடுத்து, வார இறுதி நாள்களில் காணப்படும் வழக்கமான போக்குவரத்தின்றி, தில்லி சாலைகள் வெறிச்சோடின. முக்கிய பேருந்து நிலையங்களில் ஆள்நடமாட்டமின்றி, முக்கிய சந்திப்புகள் காலியாகக் காட்சியளித்தன.

காஷ்மீரி கேட் பேருந்து நிலையம், எப்போதும் வெளியூரிருந்து வரும் மற்றும் வெளியூர் செல்லும் மக்களால் நிரம்பி வழியும் நிலையில், இன்று வெறிச்சோடிக் காணப்பட்டது.

பேருந்து நிலையங்களிலும், சாலைகளிலும் ஒரு சில மக்களின் நடமாட்டமே தென்பட்டது. அவர்களையும் காவலர்கள் வெளியே வரக் கூடாது என்று எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →