முகப்பு
இந்தியா

தில்லி: தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 27.87%

​தில்லியில் புதிதாக 18,286 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 27.87 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:


தில்லியில் புதிதாக 18,286 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 27.87 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,09,970 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 21,846 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 28 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 15,94,788 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 25,363 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 89,819 ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் 1,65,924 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,85,34,771 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.