புதுச்சேரியில் 30 சுகாதார அதிகாரிகளுக்கு கரோனா
புதுச்சேரியில் கடந்த ஒரு வாரத்தில் மருத்துவர்கள் உள்பட 30 சுகாதார அதிகாரிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த ஒரு வாரத்தில் மருத்துவர்கள் உள்பட 30 சுகாதார அதிகாரிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்தத் துறை இயக்குநர் ஜி.ஸ்ரீராமலு வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த ஒரு வாரத்தில் 12 மருத்துவர்கள் உள்பட 30 சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் உள்ள நெஞ்சக நோய்க்கான அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்க 180 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேர தகவலின்படி யூனியன் பிரதேசத்தில் 1,160 பேர் காரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.