முகப்பு
இந்தியா

மும்பை ஐஐடி.யில் 7-வது மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை

ஐஐடி மும்பையில் முதுகலை பட்டதாரி மாணவர் ஒருவர் விடுதியின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

ஐஐடி மும்பையில் முதுகலை பட்டதாரி மாணவர் ஒருவர் விடுதியின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாதிக்கப்பட்டவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷன் மாளவியா என்று தெரியவந்தது. அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், மாணவர்கள் 4-வது மாடியில் உள்ள தனது விடுதி அறையில், தன் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று எழுதிவைத்துள்ளார். 

பலத்த சத்தம் கேட்டு அங்கு பணியிலிருந்த பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் ஓடிவந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் மாளவியா கிடந்ததைக் கண்டு, சம்பந்தப்பட்ட விடுதி அதிகாரிகளுக்கும், சக மாணவர்களுக்கும் தகவல் கொடுத்தனர். 

மாணவரை மீட்டு உடனடியாக ராஜாவாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அவரின் மரணம் குறித்து போவாய் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. 

முதற்கட்ட விசாரணையின்படி, ஐஐடி.,யில் சேருவதற்கு முன்பாகவே மாளவியா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. 

முழு கட்டுரையைப் படிக்க →