இந்தியா

கோவா தேர்தல்: தேசியவாத காங்கிரஸ், சிவசேனை நாளை பேச்சு

DIN


கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனை கட்சிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

கோவாவில் 40 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறுகிறது. மகாராஷ்டிரத்தில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் கோவாவிலும் கூட்டணி வைத்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் செய்தியாளர்களிடம் கூறியது:

"சிவசேனையுடனான இறுதிப் பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பை கட்சியின் மூத்த தலைவர் பிரஃபுல் படேல் அறிவிப்பார். தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுக்கு பிரஃபுல் படேலுடன் ஜிதேந்திர அவாதும் கோவா செல்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதியுடன் கூட்டணி வைத்துள்ளோம். மணிப்பூரில் காங்கிரஸுடன் கைகோர்த்துள்ளோம். கோவாவில் கூட்டணி வைக்க மாநில காங்கிரஸ் தலைமை ஒப்புக்கொள்ளாததால், சிவசேனையும் தேசியவாத காங்கிரஸும் கூட்டாகப் போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT