கோப்புப்படம் 
இந்தியா

உ.பி. தேர்தல்: பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

உத்தரப் பிரதேச தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ள நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

DIN

உத்தரப் பிரதேச தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ள நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன.

இந்நிலையில், முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் 30 பேர் கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

இதில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, மூத்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஸ்மிருதி ராணி, தர்மேந்திர பிரதான், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்த பட்டியலில் வருண் காந்தி, மேனகா காந்தியின் பெயர்கள் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT