முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 499 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 499 காவலர்கள் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்தியா

மகாராஷ்டிரத்தில் 499 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 499 காவலர்கள் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 499 காவலர்கள் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

மாநிலத்தில் 821 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 3,269 காவலர்கள் என மொத்தம் 4,090 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மாநிலத்தில் காவலர்கள் முதல் உதவி துணை ஆணையர் வரை மொத்தம் 40,959 காவலர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 

காவல்துறையில், கரோனா பாதித்து 46 காவல் அதிகாரிகளும், 459 காவலர்களும் உயிரிழந்துள்ளனர். 

மும்பையில், இதுவரை மொத்தம் 10,666 காவலர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 126 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, ​​மும்பை காவல்துறையில் 1,273 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

மராட்டிய மாநிலத்தில் புதிய வகை கரோனாவான ஒமைக்ரான் அதிகளவில் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →