இந்தியா

தில்லியில் அடர் பனிமூட்டம்: 13 ரயில்கள் தாமதம்

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை காலை அடா் பனிமூட்டம் நிலவியதையடுத்து, தில்லி செல்லும் பல ரயில்கள் தாமதமாக வந்ததாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

வடக்கு ரயில்வேயின் தகவலின்படி, 

அடந்த பனிமூட்டம் காரணமாக காண்புதிறன் குறைந்ததைத் தொடர்ந்து தில்லி செல்லும் 13 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. 

ஹவுரா-புது தில்லி எக்ஸ்பிரஸ், பூரி-புது தில்லி எக்ஸ்பிரஸ், கோரக்பூர்-புது தில்லி எக்ஸ்பிரஸ், மும்பை-புது தில்லி எக்ஸ்பிரஸ், கான்பூர்-புது தில்லி எக்ஸ்பிரஸ் உள்பட சுமார் 13 ரயில்கள் இன்று தாமதமாக இயங்கும் என்று வடக்கு ரயில்வேயின் சிபிஆர்ஓ தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் படி, இன்று காலை 7 மணிக்கு நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது, அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியஸைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தேசிய தலைநகர் பாலம் பகுதியில் காண்புத்திறன் இன்று 50 மீட்டராக குறைந்துள்ளது.

தேசிய தலைநகரில் குளிர்ந்த காலநிலைக்கு மத்தியில் மக்கள் நெருப்பை மூட்டி தங்களை ஆறுதல்படுத்துவதையும் காண முடிந்தது.

பனிமூட்டம் காரணமாக குறைந்த தெரிவுநிலை இருந்தபோதிலும், தில்லி விமான நிலையத்தில் வியாழக்கிழமை காலை விமானச் செயல்பாடுகள் இயல்பாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT