முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 46 ஆயிரம் பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 46,197 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 46,197 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 46,197 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டாலும், கடந்த 24 மணி நேரத்தில் 52,025 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 37 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 69,67,432 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒமைக்ரான்:

புதிதாக 125 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே வரும் 24-ம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக மாநில பள்ளிக் கல்வித் துறை வர்ஷா கெய்க்வாட் இன்று அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.