பஞ்சாப் தோ்தல்: ஆம் ஆத்மி முதல்வா் வேட்பாளா் பகவந்த் மான் துரி தொகுதியில் போட்டி
பஞ்சாப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மியின் முதல்வா் வேட்பாளா் பகவந்த் மான் துரி தொகுதியில் போட்டியிட உள்ளார்.
பஞ்சாப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மியின் முதல்வா் வேட்பாளா் பகவந்த் மான் துரி தொகுதியில் போட்டியிட உள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மியின் முதல்வா் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்று அக்கட்சி மக்களிடம் கருத்துகளைக் கோரியது.
அதனடிப்படையில் ஆம் ஆத்மியின் முதல்வா் வேட்பாளராக பகவந்த் மான் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் தலைவரும் தில்லியின் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அண்மையில் அறிவித்தார்.
இதையும் படிக்க- உத்தரகண்ட்: காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை முடிவு
இந்த நிலையில் பஞ்சாப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மியின் முதல்வா் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள பகவந்த் மான் துரி தொகுதியில் போட்டியிட உள்ளார். இத்தகவலை ஆம்ஆத்மியின் தேசிய செய்தி தொடர்பாளர் ராகவ் சாதா தெரிவித்துள்ளார். பஞ்சாபி மொழியில் நகைச்சுவை நடிகராக இருந்த பகவந்த் மான் (48) பின்னா் அரசியலில் பிரவேசித்தாா்.
தற்போது பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவராகவும் அந்த மாநிலத்தில் உள்ள சங்ரூா் தொகுதி எம்.பி.யாகவும் பதவி வகிக்கிறாா். பஞ்சாப் தோ்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளில் இதுவரை ஆம் ஆத்மி மட்டும்தான் முதல்வா் வேட்பாளரை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.