இந்தியா

தில்லியில் கடும் பனிமூட்டம்: 21 ரயில்கள் தாமதம்

DIN

தலைநகர் தில்லியில் கடந்த சில தினங்களாக காலையில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. பனிமூட்டம் காரணமாக தில்லி செல்லும் ரயில்கள் தாமதமாக வந்தவண்ணம் உள்ளன. 

வெள்ளிக்கிழமை காலையும் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் 21 ரயில்கள் தாமதமாக வந்ததாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

பூரி புது தில்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், கயா புது தில்லி மகாபோதி எக்ஸ்பிரஸ், சஹர்சா புது தில்லி எக்ஸ்பிரஸ், ஹவுரா-புது தில்லி பூர்வா எக்ஸ்பிரஸ், பிரயாக்ராஜ் - புது தில்லி எக்ஸ்பிரஸ், சென்னை - புது தில்லி எக்ஸ்பிரஸ் மற்றும் லக்னோ - புது தில்லி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 21 ரயில்கள் இன்று தாமதமாக வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, இன்று காலை 8.30 மணிக்கு நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேபோன்று தில்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவிலே தொடர்ந்து நீடித்து வருகிறது. காற்றின் தரக்குறியீடு 353 ஆக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT