நாட்டில் புதிதாக 3.47 லட்சம் பேருக்கு கரோனா; 703 பேர் பலி
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,47,254 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,47,254 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தரவுகள் அடங்கிய தகவலை மத்திய சுகாதாரத் துறை இன்று (ஜன.21) வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 3,47,254 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,85,66,027-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | கோவை: 5வது நாளாக தொடரும் சிறுத்தையை பிடிக்கும் பணி
இதனால் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 17.94 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சிகிச்சை பலனில்லாமல் 703 பேர் நேற்று பலியான நிலையில், தற்போது 20,18,825 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் 5.23 சதவிகிதம் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,51,777 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.60 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுவரை நாடு முழுவதும் 160 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.