இந்தியா

கோவின் இணையதளத்தில் இனி ஒரே தொலைபேசி எண்ணில் 6 பேர் முன்பதிவு செய்யலாம் 

DIN

கோவின் இணையதளத்தில் இனி ஒரே தொலைபேசி எண்ணில் 6 பேர் முன்பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சாா்பில் தொடங்கப்பட்ட கோவின் இணையதளத்தில் கரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள், தடுப்பூசி போடப்பட்டவா்களின் விவரங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த இணையதளம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. 

தற்போது இணையதளத்தில் மேலும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒருவரின் தடுப்பூசி நிலவரம் தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தால், அதை ரத்து செய்ய முடியும். இரண்டு தவனை தடுப்பூசி நிலையிலிருந்து, ஒரு தவணையாகவும், அல்லது தடுப்பூசி செலுப்படவில்லை என மாற்றிக் கொள்ள முடியும்.

தவறான பதிவின் காரணமாக ஒரு சிலருக்கு தடுப்பூசி சான்றிதழ்களும் உருவாக்கப்பட்டிருந்தாலும், தடுப்பூசி நிலவரத்தை பயனாளியால் சரிசெய்து கொள்ள முடியும்.  இந்த மாற்றத்துக்கு ஆன்லைன் மூலம் வேண்டுகோளை சமர்ப்பிக்க வேண்டும். 3 முதல் 7 நாட்களில், மாற்றங்கள் செய்யப்படும். 

அதன்பின் இந்த பயனாளிகள் தங்களின் தடுப்பூசிகளை அருகில் மையங்களில் செலுத்திக் கொள்ள முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT