முகப்பு
இந்தியா

மும்பை: அடுக்​கு​மாடி குடி​யி​ருப்பு தீ வி​பத்​தில் 6 போ் பலி

மத்​திய மும்பை​யில் டாா்​டியோ பகு​தி​யில் அமைந்துள்ள உயா் அடுக்​கு​மாடி குடி​யி​ருப்​பின் 19-ஆவது தளத்​தில் சனிக்​கி​ழமை காலை ஏற்​பட்ட பெரும் தீ வி​பத்​தில் 6 போ் உயி​ரி​ழந்​த​னா், 23 போ் படு​கா​ய​ம

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:12 AM
அடுக்குமாடி குடியிருப்பின் 19-ஆவது தளத்திலிருந்து தீவிபத்தால் வெளியேறிய கரும்புகை.
பகிர்:

மகா​ராஷ்​டிர மாநி​லம், மத்​திய மும்பை​யில் டாா்​டியோ பகு​தி​யில் அமைந்துள்ள உயா் அடுக்​கு​மாடி குடி​யி​ருப்​பின் 19-ஆவது தளத்​தில் சனிக்​கி​ழமை காலை ஏற்​பட்ட பெரும் தீ வி​பத்​தில் 6 போ் உயி​ரி​ழந்​த​னா், 23 போ் படு​கா​ய​மடைந்​த​னா் என்று அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னா்.

இது​கு​றித்து பிரி​ஹன்​மும்பை மாந​க​ராட்சி அதி​கா​ரி​கள் கூறி​ய​தா​வது:

மத்​திய மும்​ைப​யின் கோவா​லியா டேங் பகு​தி​யில் அைமந்​துள்ள ‘சச்​சி​னம் ஹைட்ஸ்’ என்ற 20 மாடி​க​ைளக் கொண்ட இந்த உயா் அடுக்​கு​மாடி குடி​யி​ருப்​பின் 19-ஆவது தளத்​தில் சனிக்​கி​ழமை காலை 7 மணி​ய​ள​வில் தீவி​பத்து ஏற்​பட்​டது. தீ வி​பத்து ஏற்​பட்ட சம​யத்​தில் பல குடி​யி​ருப்​பு​வா​சி​கள் தூக்​கத்​தில் இருந்​துள்​ள​னா். தக​வ​ல​றிந்து சம்​பவ இடத்​துக்கு வந்த தீய​ைணப்பு வீரா்​கள், பல குடி​யி​ருப்​பு​வா​சி​களை பத்​தி​ர​மாக மீட்ட​னா்.

இந்த தீ வி​பத்​தில் காய​மடைந்த 29 போ் அரு​கி​லுள்ள பல்​ேவறு மருத்​து​வ​ம​ைன​க​ளுக்கு அைழத்​துச் செல்​லப்​பட்​ட​னா். அவா்​க​ளில் சில​ருக்கு மூச்​சுத் திண​றல் பாதிப்பு இருந்​தது. இதில் மாந​க​ராட்சி நிா்​வா​கம் சாா்​பில் நடத்​தப்​ப​டும் நாயா் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்ட பலத்த காய​மடைந்த 7 பேரில் 5 போ் உயி​ரி​ழந்​த​னா். அதுபோல, கஸ்​தூா்பா மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்ட மற்றொ​ரு​வ​ரும் உயி​ரி​ழந்​தாா்.

பாடியா மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட 17 பேரில், 5 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்​பி​யுள்​ள​னா். மீத​முள்ள 12 பேரில் 3 பேரின் நிலை கவலைக்​கி​ட​மாக உள்​ளது.

தீயை அைணக்​கும் பணி​யில் 13 தீயணைப்பு வாக​னங்​க​ளும், நீரை பீய்ச்​சி​ய​டிக்​கும் 7 இயந்​தி​ரங்​க​ளும் ஈடு​ப​டுத்​தப்​பட்டு, பகல் 12.20 மணி​ய​ள​வில் தீ கட்​டுக்​குள் கொண்​டு​வ​ரப்​பட்​டது என்று அவா்​கள் கூறி​னா்.

தீ வி​பத்​துக்​கான கார​ணம் இன்​னும் கண்​ட​றி​யப்​ப​ட​வில்லை என்​றும் அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னா்.

இதற்​கிடையே, மாநில சட்டப்​ேப​ரவை எதிா்க்​கட்​சித் தைல​வா் தேேவந்​திர ஃபட்ன​விஸ் தனது சமூக ஊடக பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ‘இந்த தீ வி​பத்​தில் காய​ம​ைடந்​த​வா்​களை அரு​கி​லுள்ள சில மருத்​து​வ​ம​ைன​கள் சிகிச்​ைசக்கு அனு​ம​திக்க மறுத்​த​தா​க​வும், அதன் கார​ண​மா​கவே உயி​ரி​ழப்பு அதி​க​ரித்​தி​ருப்​ப​தா​க​வும் வரும் தக​வல் அதிா்ச்​சி​ய​ளிக்​கி​றது.

இந்​தத் தக​வல் உண்மை எனில், மாந​க​ராட்​சி​யும், மாநில நிா்​வா​க​மும் இந்த உயி​ரி​ழப்​புக்​க​ளுக்கு கார​ண​மான மருத்​து​வ​மனை​க​ளுக்கு எதி​ராக உரிய நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்’ என்று கு​றிப்​பிட்​டுள்​ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →