இந்தியா

உ.பி. காங்கிரஸ் முகம் யார்? பிரியங்கா காந்தி புதிய விளக்கம்

DIN


உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் முகம் நான் மட்டும்தான் எனக் கூறவில்லை என்று மேலிடப் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி விளக்கமளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் முகம் நான்தான் எனக் கூறினார். 

இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரியங்கா காந்தி அளித்த பிரத்யேக பேட்டியில் காங்கிரஸின் முகம் நான் மட்டுமல்ல என விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

"உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் நான் மட்டுமே காங்கிரஸின் முகம் எனக் கூறவில்லை. நீங்கள் ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டதால் அதை சற்று மிகைப்படுத்திக் கூறினேன். 

நிறைய மாநிலங்கள் உள்ளன. அங்கெல்லாம் பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி, மேலிடப் பொறுப்பாளர்கள் இருப்பார்கள். நீங்கள் முதல்வர் வேட்பாளரா என அவர்களிடம் கேட்பீர்களா? பிறகு ஏன் இந்தக் கேள்வி என்னிடம் முன் வைக்கப்படுகிறது?" என்றார் அவர்.

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT