இந்தியா

நேதாஜியின் 125-வது பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

DIN


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மரியாதை செலுத்தியுள்ளனர்.

குடியரசுத் தலைவர் ட்விட்டர் பதிவு:

"நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளில் அவருக்கு இந்தியா நன்றியுடன் மரியாதை செலுத்துகிறது. ஆசாத் ஹிந்த் - சுதந்திர இந்தியாவுக்கான தனது தீவிர உறுதிப்பாட்டை நிறைவேற்ற அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள் அவரை தேசிய அடையாளமாக மாற்றியது. அவரது லட்சியமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றும் ஊக்கமளிக்கும்."

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பதிவு:

"நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளில் அவருக்குத் தலை வணங்குகிறேன். நமது நாட்டிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள்."

முன்னதாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின்  125-வது பிறந்த தின நூற்றாண்டை நாடு கொண்டாடி வரும் வேளையில், கிரானைட்டால் செய்யப்பட்ட அவரது பிரமாண்ட சிலை இந்தியா கேட் பகுதியில் நிறுவப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21-ம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெய்க்காரபட்டி குருவப்பா பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,159 கோடி டாலராக உயா்வு

இந்திரா காந்தியிடம் பிரதமா் மோடி பாடம் கற்க வேண்டும்: பிரியங்கா காந்தி

பிகாரில் ‘நீட்’ வினாத்தாள் கசிவு: 13 போ் கைது

மத்திய ராஃபாவிலிருந்தும் பொதுமக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு

SCROLL FOR NEXT