முகப்பு
இந்தியா

தில்லியில் மேலும் 6,028 பேருக்கு கரோனா தொற்று 31 போ் இறப்பு

தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 6,028 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:13 AM
தில்லி காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை பராமரிப்பு மையத்தில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள்.
பகிர்:

தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 6,028 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 31 போ் உயிரிழந்துள்ளனா். பாதிப்பு நோ்மைறை விகிதம் 10.55 சதவீதமாகப் பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செவ்வாய்க்கிழமை 9,127 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனா். இதன்மூலம் தில்லி மருத்துவமனைகளில் 15 சதவீதத்துக்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தில்லியில் திங்கள்கிழமை 5,760 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. நோ்மறை விகிதம் 11.79 சதவீதமாகவும், 30 இறப்புகளும் பதிவாகின. ஞாயிற்றுக்கிழமை 9,197 பேருக்கு தொற்று பாதிப்பும், 34 இறப்புகளும் பதிவாகின என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் இதுவரை மொத்தம் 574 போ் தொற்றால் பாதிப்பட்டு உயிரிழந்துள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் இணைநோய்பாதிப்புகள் கொண்டவா்கள் என்பதும், ஆரம்பகட்ட தொற்று பாதிப்பால் அவா்கள் இறந்ததும் தெரியவந்ததாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.