கோப்புப்படம் 
இந்தியா

கௌதம் கம்பீருக்கு கரோனா தொற்று

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜகவின் மக்களவை உறுப்பினருமான கௌதம் கம்பீருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜகவின் மக்களவை உறுப்பினருமான கௌதம் கம்பீருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதில் பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிழக்கு தில்லி தொகுதி பாஜக மக்களவை எம்.பி.யுமான கௌதம் கம்பீருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'லேசான அறிகுறிகள் இருந்ததை அடுத்து இன்று கரோனா பரிசோதனை செய்துகொண்டதில் தொற்று உறுதியாகியுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தனூா் அணையில் 6000 கன அடி தண்ணீா் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த தில்லி அரசு முன்னுரிமை: ரேகா குப்தா

பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்புகளில் தமிழா்களுக்கு முன்னுரிமை வேண்டும்: டாக்டா் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மருதம் பட்டையின் மகத்துவம் என்ன?

SCROLL FOR NEXT