கோப்புப்படம் 
இந்தியா

காங்கிரஸிலிருந்து யார் வெளியேறினாலும் பொருட்டே இல்லை: கெலாட்

135 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட காங்கிரஸிலிருந்து யாரேனும் வெளியேறினால், அது பொருட்டே இல்லை என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார்.

DIN


135 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட காங்கிரஸிலிருந்து யாரேனும் வெளியேறினால், அது பொருட்டே இல்லை என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார்.

ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது:

"காங்கிரஸிலிருந்து யார் வெளியேறினாலும், காங்கிரஸில் யார் இணைந்தாலும் அது வரவேற்கக்கூடியது. அதுபற்றி பெரிதாக பேசுவதற்கு எதுவும் இல்லை. அனைத்து மத்திய அரசு அமைப்புகளும் நெருக்கடியில் பணியாற்றுகின்றன.

காங்கிரஸ் ஒரு பெரிய அமைப்பு. நாட்டில் ஒரு இயக்கம். அதற்கு 135 ஆண்டுகால வரலாறு உள்ளது. இதிலிருந்து நிறைய பேர் போவார்கள், மீண்டும் திரும்ப வருவார்கள். வரலாறு இதைப் பார்த்திருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான்" என்றார்.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்பிஎன் சிங் செவ்வாய்க்கிழமை பாஜகவில் இணைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோடியக்கரையில் பலத்தக் காற்று

புதுவையில் அரசுப் பணியாளா்கள் நியமன முறையில் நிலவும் சிக்கல்களை களைய வேண்டும்: ஏ.எம்.எச். நாஜிம்

அண்ணாமலையாா் கோயிலில் திருக்கல்யாணம்

காரைக்காலில் சுற்றுலா தின விழா நடத்துவது குறித்து ஆலோசனை

உரக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்து; பொதுமக்கள் பாதிப்பு

SCROLL FOR NEXT