முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 2.86 லட்சம் பேருக்கு கரோனா; 573 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,86,384 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
நாட்டில் புதிதாக 2.86 லட்சம் பேருக்கு கரோனா
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,86,384 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 573 பேர் உயிரிழந்தனர். 

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்கிய விவரங்களை மத்திய சுகாதாரத் துறை இன்று (ஜன.27) வெளியிட்டது. அதில் ஒரு நாளில் மட்டும் 2,86,384 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,03,71,500-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 573 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,91,700ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 3,06,357 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர். நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு 22,02,472 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 19.59 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.46 சதவிகிதமாக உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →