கர்நாடகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? அமைச்சர் தகவல் 
இந்தியா

கர்நாடகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? அமைச்சர் தகவல்

கர்நாடகத்தில் மிக விரைவில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக கர்நாடக கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

IANS


பெங்களூரு: கர்நாடகத்தில் மிக விரைவில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக கர்நாடக கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், எனது அமைச்சரவையில், பள்ளிகளை திறப்பது குறித்து கருத்துக் கேட்கப்படும் என்றும் கர்நாடக கல்வித் துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  பள்ளிகள் மூடப்பட்டன. அதற்கு இரண்டு காரணம், ஒன்று பெங்களூருவில் கரோனா பாதிப்பு அதிகமாக பதிவானதும், மாநில சராசரியை விடவும், பெங்களூருவில் கரோனா அதிகமாக பதிவானதும் காரணங்களாகும்.

கரோனா மூன்றாம் அலை எவ்வாறு இருக்கும் என்பது தெரியாமல், முன்னெச்சரிக்கையாக குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் மூடப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

ஒரு வேளை 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டால் வகுப்புகளை நடத்த கல்வித் துறை தயாராக உள்ளது. ஒற்றை இலக்கத்தில் இருந்த கரோனா பாதிப்பு நான்கு இலக்கங்களில் பதிவாகி வருகிறது. எண் அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது என்கிறார் அமைச்சர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கப்பூா்: புலம்பெயா் தொழிலாளா்களுடன் இந்திய தூதரகம் பொங்கல் கொண்டாட்டம்

காஷ்மீா் எல்லையில் காட்டுத் தீ! கண்ணி வெடிகள் வெடித்ததால் பதற்றம்!

மகாத்மா காந்தியின் போதனைகள் தற்காலத்துக்கு மிகவும் அவசியம்: ஜொ்மனி பிரதமா்

தொழில்நுட்பக் கோளாறு: இலக்கை எட்டாத பிஎஸ்எல்வி சி-62!

உத்தர பிரதேசம்: பணிக்கு வராத 17 அரசு மருத்துவா்கள் பணிநீக்கம்

SCROLL FOR NEXT