முகப்பு
இந்தியா

பிகார்: ராணுவ விமானம் விபத்து, விமானிகள் மீட்பு

பிகாரில் பயிற்சியின் போது ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்திற்குள்ளானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
கோப்புப்படம்
பகிர்:

பிகாரில் பயிற்சியின் போது ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்திற்குள்ளானது.

பிகார் மாநிலம் கயாவில் அமைந்துள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் இன்று இரண்டு விமானிகள் இயக்கிச் சென்ற ராணுவ விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. 

இருப்பினும் , விமானிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர்.

இதுகுறித்து பிகார் சர்வதேச விமான நிலையத்தின் இயக்குநர் பங்கஜீத் சஹா, ‘ போத் கயா பகுதியில் பயிற்சியில் ஈடுபடுவதற்காக விமானத்தை இயக்கியதும் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்ததால் கீழே விழுந்தது. இருப்பினும் விமானத்தை ஓட்டிச் சென்ற 2 விமானிகளும் அருகே இருந்த கிராம மக்களால் காப்பாற்றப்பட்டனர்’ எனத் தெரிவித்தார்.

மேலும், கீழே விழுந்து நொறுங்கிய விமானத்தின் சில பாகங்களை கைப்பற்றிய பின் விபத்திற்கான காரணத்தைக் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →