நாட்டிலேயே அதிக சொத்துக்களைக் கொண்ட கட்சியாக உருவெடுத்த பாஜக 
இந்தியா

நாட்டிலேயே அதிக சொத்துக்களைக் கொண்ட கட்சியாக உருவெடுத்த பாஜக

2019-20 நிதியாண்டின் கணக்கின்படி அரசியல் கட்சிகளின் சொத்துப்பட்டியலில் ரூ.4847.78 கோடி சொத்துக்களுடன் பாரதிய ஜனதா கட்சி முன்னணியில் உள்ளது.

DIN

2019-20 நிதியாண்டின் கணக்கின்படி அரசியல் கட்சிகளின் சொத்துப்பட்டியலில் ரூ.4847.78 கோடி சொத்துக்களுடன் பாரதிய ஜனதா கட்சி முன்னணியில் உள்ளது.

ஜனநாயக சீர்திருத்தம் தொடர்பான அமைப்பு இந்தியாவில் அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி நாட்டில் அதிக சொத்துக்களைக் கொண்ட கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உருவெடுத்துள்ளது. 2019-20ஆம் நிதியாண்டு கணக்கின்படி ரூ.4847.78 கோடி சொத்துக்களுடன் பாஜக முன்னணியில் உள்ளது. இது அரசியல் கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பில் 69.37 சதவிகிதம் ஆகும். 

அதனைத் தொடர்ந்து ரூ.698.33 கோடி சொத்துக்களுடன் பகுஜன் சமாஜ் கட்சியும், ரூ.588.16 கோடி சொத்துக்களுடன் காங்கிரஸ் கட்சியும் உள்ளன.

நாடு முழுவதுமுள்ள 7 தேசியக் கட்சிகளின் மொத்தம் சொத்து மதிப்பு ரூ.6988.57 கோடி எனவும், 44 மாநிலக் கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2129.38 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

SCROLL FOR NEXT