பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்) 
இந்தியா

சாதனை படைத்த இந்தியா...வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

75 சதவிகித வயது வந்தோர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்றும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த சாதனை படைத்ததற்கு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மோடி கூறியுள்ளார்

DIN

75 சதவிகித வயது வந்தோர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள நிலையில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த சாதனை படைத்ததற்கு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி திட்டத்தை வெற்றி அடைய செய்த அனைவரை எண்ணியும் பெருமை கொள்கிறேன் என்றும் மோடி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

கரோனாவுக்கு எதிராக 75 சதவிகித வயது வந்தோர் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக மன்சுக் மாண்டவியா ட்விட்டரில், "'அனைவரின் ஆதரவு, அனைவரின் முயற்சி' என்ற தாரக மந்திரத்துடன், இந்தியாவில் வயது வந்தோரில் 75 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் போடப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் வலுப்பெற்று வருகிறோம். நாம் அனைத்து விதிகளையும் பின்பற்றி, விரைவாக தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

இந்திய அரசு செலவு இல்லாமலும் மற்றும் நேரடி மாநில கொள்முதல் மூலமும் இதுவரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 164.36 கோடிக்கும் (1,64,36,66,725) அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வழங்கியுள்ளது.

நாடு தழுவிய கரோனா தடுப்பூசி இயக்கம் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி அன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“H FILES” ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல்காந்தி!

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

SCROLL FOR NEXT