முகப்பு
இந்தியா

பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு

பெங்களூருவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 

Updated On : 31 ஜனவரி, 2022 at 12:59 PM
கோப்புப் படம்
பகிர்:

பெங்களூருவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 

கரோனா தொற்று காரணமாக பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு, 1 முதல் 10 வரை உள்ள மாணவர்களுக்கு ஆப்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டன. 

கரோனா நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு இன்னும்  வகுப்புகள் தொடங்கப்படவில்லை என்று பெங்களூருவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சுஜாதா கூறியுள்ளார். 

Advertisement

பெங்களூருவில் பள்ளிகள் தவிர, பட்டயக் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக மாநிலத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு கர்நாடகாவில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

மேலும், இன்று முதல் மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு உத்தரவை கர்நாடக அரசு  நீக்கியுள்ளது. 

தமிழ்நாடு, புணே, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளி , கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.