இந்தியா

குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெற்ற திருக்குறள்

DIN

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றும்போது திருக்குறளை மேற்கோள் காட்டினார்.

நாட்டில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. ஆண்டின் முதலாவது கூட்டத்தொடா் என்பதால், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றினார்.

அப்போது மத்திய அரசின் கல்வித் திட்டங்கள் குறித்து பேசும்போது ‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற கல்வி அதிகாரத்தில் உள்ள திருவள்ளுவரின் குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த 5வது முறையாக பட்ஜெட் தொடரில் உரையாற்றினார். இந்தாண்டுடன் அவரது பதவிக் காலம் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்னுடல் ஒத்துழைக்காத போதிலும் தீவிரமான கிரிக்கெட் பயிற்சி செய்தேன்: ஜான்வி கபூர் உருக்கம்!

கேத்ரின் ஆட்டம்!

"நான் இந்து, முஸ்லீம் என பேசியதே இல்லை”: பிரதமர் மோடி!: செய்திகள்: சிலவரிகளில் | 15.05.2024

ராஜஸ்தான் பேட்டிங்: முதலிடத்துக்கு முன்னேறுமா?

வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து: அவசரகால கதவை உடைத்து மீட்கப்பட்ட பயணிகள்!

SCROLL FOR NEXT