இந்தியா

விரிவாக்கம் செய்யப்படுகிறதா பஞ்சாப் அமைச்சரவை?

DIN

பஞ்சாபில் அமைச்சரவையை மேலும் விரிவாக்க முதல்வர் பகவந்த் மான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் இந்தாண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவை தொகுதிகளில் 92 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

ஆம் ஆத்மியின் அமைச்சரவையில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் 9 பேர் அமைச்சர்களாக உள்ளனர். பஞ்சாப் அமைச்சரவையில் முதல்வர் உள்பட 18 பேர் வரை அமைச்சர்களாக நியமிக்க வரம்பு உள்ளது.

இந்நிலையில் அமைச்சரவையை மேலும் விரிவாக்கம் செய்ய முதல்வர் பகவந்த் மான் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிர்வாகப் பணிகளை மேலும் துரிதப்படுத்த அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி மேலும் 5 பேரை அமைச்சர்களாக நியமிக்க உள்ளதாகவும் அவர்களில் பெண் ஒருவரும் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இதற்கான அறிவிப்பை விரைவில் முதல்வர் பகவந்த் மான் வெளியிடுவார் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT