சப்தமில்லாமல் வெடிக்கும் பட்டாசு: பாஜக கொண்டாட்டத்தை புறக்கணித்த ஃபட்னவீஸ் 
இந்தியா

சப்தமில்லாமல் வெடிக்கும் பட்டாசு: பாஜக கொண்டாட்டத்தை புறக்கணித்த ஃபட்னவீஸ்

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில், மும்பையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் வெற்றிக் கொண்டாட்டம் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

DIN


மும்பை: மகாராஷ்டிரத்தில் மிகப்பெரும் அரசியல் மாற்றம் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில், மும்பையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் வெற்றிக் கொண்டாட்டம் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால்..

ஆனால் என்ன? மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் இந்த கோலாகலக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை. விழா என்னவோ வெகு சிறப்பாக நடைபெற்றாலும், துணைமுதல்வர் பங்கேற்காததால், அதன் அடிநாதம் எங்கும் எழவில்லை.

தேவேந்திர ஃபட்னவீஸ் மட்டும் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிடவில்லை. அவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் எம்எல்ஏக்களான கிரிஷ் மகாஜன், பிரவீன் தாரேக்கர், பிரசாத் லத், சஞ்சய் குடே ஆகியோரும் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை.

இவர்கள் அனைவரும் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக, மகாராஷ்டிரத்தில் நடந்த அரசியல் மாற்றத்துக்கு அ முதல் ஃ வரை உருவாக்கிக் கொடுக்க, ஃபட்னவீஸுக்கு உதவியவர்கள். 

மகாராஷ்டிரத்தில் அரசியல் மாற்றம் தொடங்கியதிலிருந்து, முடிவதற்கு ஒரு சில மணி நேரங்கள் முன்பு வரை தேவேந்திர ஃபட்னவீஸ்தான் அடுத்த முதல்வர் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென, அவருக்கு முதல்வர் பதவி இல்லை என்பது முடிவானது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட, அமைச்சரவையிலேயே இடம் வேண்டாம் என பகிரங்கமாக மறுத்த ஃபட்னவீஸ், துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத்தள்ளப்பட்டார்.

மகாராஷ்டிரத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்ததைக் கொண்டாடும் நிகழ்ச்சியை புறக்கணித்த ஃபட்னவீஸ், ஹைதராபாத்தில் இன்று தொடங்கியிருக்கும் தேசிய செயற்குழுக் கூட்டத்திலும் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கொண்டாட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ ஆஷிஷ் ஷெலர் கூறுகையில், இந்த கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருப்பது மும்பைக் குழுவினர். இதில், மற்ற பகுதிகளிலிருந்தும் தலைவர்கள் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என்றார். அது போல, இதில் துணை முதல்வர் பங்கேற்பார் என்று கட்சி அறிவிக்கவில்லையே. அதில்லாமல், துணை முதல்வரின் இன்றைய பயண அட்டவணையில் இது இடம்பெற்றிருக்காது என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலமைப்பு தின உறுதியேற்பு

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் உள்பட 7 போ் கைது

நாகை: 23 மாணவா்களுக்கு ரூ.2.58 கோடி கல்விக்கடன்

குருகிராம்: போக்குவரத்து காவல் அதிகாரியிடம் பணம் பறிக்க முயற்சி! இரு போலி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது!

3 ஊழல் வழக்குகள்: ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு!

SCROLL FOR NEXT